Wednesday, July 7, 2010

ஏதாவதொரு கோவிலில் சொல்லித்தொலைப்போம்!

தமிழக கல்வித்துறையின் புகழ் மகுடத்தில் இன்னுமொரு வண்ண இறகு கூடியிருக்கிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருவது....

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவது....

கல்வி வியாபாரத்தில் புதுப்புது வியாபாரிகள் நுழைந்து கல்லா கட்டுவது....

தமிழ்க்குழந்தைகள் நாவில் தமிழை அந்நியப்படுத்துவது....

பள்ளிக்கூடம் போகும் ஒட்டகங்களாக தமிழ்க்குழ்ந்தைகளை பொதி சுமக்க வைப்பது....

அரசு விதித்த கல்விக் கட்டணங்களை ஏறிமிதிக்கும் தனியார் பள்ளிகளின் பக்கம் தன்னுடைய குருட்டுப்பார்வையை திருப்புவது....

கட்டணக்கொள்ளையால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் அவலக்குரலுக்கு தன்னுடைய செவிட்டுக்காதைக்காட்டுவது....

என்று பலவண்ண இறகுகள் இன்றைய கல்வித்துறையின் புகழ் மகுடத்தை அலங்கரிக்கின்றன.

இவை போதாதென்று இப்போது பாடநூல்கள் தட்டுப்பாடு என்றொரு கூக்குரல்.

இது அலட்சியப்படுத்தக்கூடிய குரல் அல்ல.

அபயக்கரம் நீட்டவேண்டிய குரல்.

1 ஆம் வகுப்பிற்கு நான்கு புத்தகங்கள்.
பாடநூல் கழகத்திடம் பள்ளிகள் நேரடியாக வாங்கினால் 200 ரூபாய் விலையாம்.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கினால் 240 ரூபாயாம்.

6ஆம் வகுப்பிற்கான ஐந்து புத்தகங்களும் பாடநூல் கழகம் 250 ரூபாய்க்கு விற்கும்போது, விற்பனையாளர்கள் மட்டும் 325 ரூபாய்க்கு விற்கும் நிலை.

விலை குறைவாக இருக்கிறதே என்று பாடநூல் கழகத்திற்கு பணம் செலுத்திய பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் அனுப்பப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

போகட்டும்.....கடையிலாவது வாங்கி பிள்ளைகளை சமாதானப்படுத்தலாமென்றால் புத்தகவிலையேற்றம், விற்பனையாளர் கமிஷன் குறைவு ஆகியகாரணங்களால் 1 ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு புத்தகங்களை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

பள்ளிக்கூட பிள்ளைகளின் கவலையைத்தீர்ப்பதில் விற்பனையாளர்களுக்கு ஆர்வமில்லை.

மாணவர்களின் படிப்பு பாழாகிறதே என்று கல்வித்துறைக்கும் கவலையில்லை.

தான் பெற்றெடுத்த பிள்ளை எக்கேடாவது கெட்டுப்போகட்டும் என்று பெற்றவன் விட்டுவிட முடியுமா என்ன?

ஏதாவதொரு கோவிலிலாவது சொல்லித்தொலைப்பானில்லையா

3 comments:

vignaani said...

எழுபதுகளிலிருந்தே புதிய அரசு பள்ளிகள் திறக்காததினாலும் , வேலையின்மை காரணமாக வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் வழக்கம் துவங்கியதாலும் , மெட்ரிக் பள்ளிகள் அதிகமாக் உதயம் ஆகின.
அதே சமயம் 1960 முதலே பள்ளி/கல்லூரிகளில் அரசியல் அதாவது திராவிட கட்சிகளின் தாக்கம் அதிகம் ஆகியது. ஆசிரியர்களின் அரசியல் சார்பு, அதனால் அவர்களை தட்டி கேட்காத கல்வித்துறை அதிகாரிகள், தவிரவும் அகில இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவிய லஞ்ச ஊழல் அரசுமுறை: இவை அனைத்தும் சேர்த்து உள்ள அரசுப் பள்ளிகள் சீரழியத் தொடங்கின. சென்னை, மதுரை முதலிய பெரிய ஊர்களில் அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்று வழி கல்வி ஒரு பிரிவு(செக்ஷன்) என இருந்தது போய் மெட்ரிக் பள்ளிகளில் எல்லா வகுப்புகளிலும் ஆங்கிலமே பயிற்று வழி என ஆகியது. சிறிய ஊர்களில் இருந்து நகரம் நோக்கி மக்கள் குடி பெயர்ந்ததால் மக்கள் தொகை பெருகிய காலம்; புதிய அரசு பள்ளிகள் திறக்கப் படவில்லை. ஆகவே மெட்ரிக் பள்ளிகள் வந்தது காலத்தின் கட்டாயம்.
ஆரம்பக் கல்வி உதவி முதல் அமைச்சரின் கீழ் வர வேண்டும். ஸ்டாலின் ஒருவரே நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய முடியும்.

vignaani said...

NOT FOR PUBLICATION

பதிவர் நீண்ட காலம் ஆசிரியர் ஆகவும், சில காலம் கல்வித்துறையில் மேலாளராக பணி ஆற்றியவர் என காண்கிறேன். நான் பின்னூட்டத்தில் சொன்னது பொதுவாக நிலவும் கருத்து. மனம் புண் பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
என் பள்ளி பருவம் ஐம்பத்து ஆறு முதல் அறுபத்தேழு வரை; அதன் பின் கல்லூரி. என் தந்தை ஆசிரியர் என்பதால் கல்வி துறையில் எனக்கு மிக ஆர்வம் உண்டு

m.sekhar (nerkuppai.thumbi)
http://makaranthapezhai.blogspot.com

vignaani said...

This is the comment that should have appeared in the first instance:

எழுபதுகளிலிருந்தே புதிய அரசு பள்ளிகள் திறக்காததினாலும் , வேலையின்மை காரணமாக வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் வழக்கம் துவங்கியதாலும் , மெட்ரிக் பள்ளிகள் அதிகமாக் உதயம் ஆகின.
அதே சமயம் 1960 முதலே பள்ளி/கல்லூரிகளில் அரசியல் அதாவது திராவிட கட்சிகளின் தாக்கம் அதிகம் ஆகியது. ஆசிரியர்களின் அரசியல் சார்பு, அதனால் அவர்களை தட்டி கேட்காத கல்வித்துறை அதிகாரிகள், தவிரவும் அகில இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவிய லஞ்ச ஊழல் அரசுமுறை: இவை அனைத்தும் சேர்த்து உள்ள அரசுப் பள்ளிகள் சீரழியத் தொடங்கின. சென்னை, மதுரை முதலிய பெரிய ஊர்களில் அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்று வழி கல்வி ஒரு பிரிவு(செக்ஷன்) என இருந்தது போய் மெட்ரிக் பள்ளிகளில் எல்லா வகுப்புகளிலும் ஆங்கிலமே பயிற்று வழி என ஆகியது. சிறிய ஊர்களில் இருந்து நகரம் நோக்கி மக்கள் குடி பெயர்ந்ததால் மக்கள் தொகை பெருகிய காலம்; புதிய அரசு பள்ளிகள் திறக்கப் படவில்லை. ஆகவே மெட்ரிக் பள்ளிகள் வந்தது காலத்தின் கட்டாயம்.
ஆரம்பக் கல்வி உதவி முதல் அமைச்சரின் கீழ் வர வேண்டும். ஸ்டாலின் ஒருவரே நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய முடியும்

Post a Comment