Monday, May 10, 2010

நூறுசதவீத பைத்தியங்கள்

வணிக நோக்கில் நடத்தப்படும் கல்விக்கூடங்களின் பைத்தியக்காரத்தனம் உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய தினமணி செய்தித்தாளில் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நடத்திய அட்டூழியம் வெளியாகி உள்ளது.

தனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் முப்பதுபேரை மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளது இந்தப்பள்ளி.

மாணவர்கள் செய்த தவறென்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 30 மாணவர்களும் தேர்ச்சிபெற வாய்ப்பில்லையாம்.

பத்தாம் வகுப்பு தேர்விற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.

ஓராண்டு காலத்தில் இந்த 30 மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இந்தப்பள்ளியில் வேறு என்னவேலை நடந்துகொண்டிருக்கிறது?

நூறுசதவீத தேர்ச்சி என்று மார்தட்டிக்கொள்ளவும், அதன்மூலம் பெற்றோரின் பணப்பையை தட்டிப்பறிக்கவும் துடிக்கின்றன இந்த தனியார் பள்ளிகள்.

இந்த லட்சணத்தில் அதிகாரிகளின் நெருக்குதல் வேறு.

ஒவ்வோர் ஆண்டும் நூறுசதவீத தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தடை செய்யப்படவேண்டும்.

மாறாக, 90 சதவீதத்திற்குமேல் தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு பொன்னாடை போர்த்தலாம்; விருது வழங்கலாம்; வேறு எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

போதுமான ஆசிரியர்களை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை.

ஆனால் நூறுசதவீத தேர்ச்சிவேண்டும் என்று பள்ளித்தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்க மட்டும் இந்த அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள்.

இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது.

முதல் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை தன்னுடைய பள்ளியில் படித்த முப்பது மாணவர்களை கடுமையாக உழைத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இதுபோன்ற பள்ளிகள் இந்த நாட்டிற்குத்தேவைதானா?

வெட்கக்கேடு!

Friday, May 7, 2010

சத்துணவிற்கே சோகையா?

“அப்பனுக்கு சாராயம்; பிள்ளைக்கு சத்துணவு” என்று மேட்டுக்குடி மக்கள் விமர்சனம் செய்வது உண்டு.

முதற்பாதி மாதாமாதம் வளர்ச்சியடைகிறது. முதல்வரின் கவனத்தை உடனடியாக கவருகிறது.

அடுத்தபாதி மாதாமாதம் தேய்கிறது. முதல்வர் கிடக்கட்டும்; அதிகாரிகள்கூட கவனிப்பதில்லை.

சத்துணவு இப்போது ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

இது கசப்பான உண்மை. பள்ளிகளுக்குச்செல்லும் மருத்துவக்குழுவின் கணிப்பின்படி ஏறத்தாழ 90 சதவீதம் மாணவ மாணவிகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை விவசாயக்குடும்ப பின்னணியில் இருப்பவர்கள். காலையில் கிடைப்பதை தின்றுவிட்டு அல்லது குடித்துவிட்டு பள்ளிக்கு வருபவர்கள்.

மதியம் பள்ளியில் சாப்பாடு கொடுக்கும்வரை பசிமயக்கத்தோடு இருப்பவர்கள்.

சத்துணவு என்னும் பெயரில் ஒரு சாப்பாடு கொடுத்தபிறகுகூட முழுப்பசி என்பது போய் அரைப்பசி என்றாகிவிடுகிறது இந்தக்குழந்தைகளுக்கு.

ஒரு மாணவருக்கு 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 20 பைசா காய்கறி, 8.5 பைசா மளிகைப்பொருட்கள் என்று அரசாங்கம் பார்த்துப்பார்த்து செலவழிக்கிறது. இதில் லஞ்சம் எல்லாம் போக ஒரு பிள்ளைக்கு என்ன கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த லட்சணத்தில் சிறப்பு உணவு என்று ஒரு கூத்து.

16 கிராம் உருளைக்கிழங்கும், 20 கிராம் கொண்டைக்கடலையும் சிறப்பு உணவுப்பட்டியல்.

ஏதோ மூன்று முட்டை இருப்பதால் இந்தப்பிள்ளைகள் இன்னும் சத்துணவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

சத்துணவு வழங்கப்படும் முறை சீர் படவே“அப்பனுக்கு சாராயம்; பிள்ளைக்கு சத்துணவு” என்று மேட்டுக்குடி மக்கள் விமர்சனம் செய்வது உண்டு.

முதற்பாதி மாதாமாதம் வளர்ச்சியடைகிறது. முதல்வரின் கவனத்தை உடனடியாக கவருகிறது.

அடுத்தபாதி மாதாமாதம் தேய்கிறது. முதல்வர் கிடக்கட்டும்; அதிகாரிகள்கூட கவனிப்பதில்லை.

சத்துணவு இப்போது ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

இது கசப்பான உண்மை. பள்ளிகளுக்குச்செல்லும் மருத்துவக்குழுவின் கணிப்பின்படி ஏறத்தாழ 90 சதவீதம் மாணவ மாணவிகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை விவசாயக்குடும்ப பின்னணியில் இருப்பவர்கள். காலையில் கிடைப்பதை தின்றுவிட்டு அல்லது குடித்துவிட்டு பள்ளிக்கு வருபவர்கள்.

மதியம் பள்ளியில் சாப்பாடு கொடுக்கும்வரை பசிமயக்கத்தோடு இருப்பவர்கள்.

சத்துணவு என்னும் பெயரில் ஒரு சாப்பாடு கொடுத்தபிறகுகூட முழுப்பசி என்பது போய் அரைப்பசி என்றாகிவிடுகிறது இந்தக்குழந்தைகளுக்கு.

ஒரு மாணவருக்கு 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 20 பைசா காய்கறி, 8.5 பைசா மளிகைப்பொருட்கள் என்று அரசாங்கம் பார்த்துப்பார்த்து செலவழிக்கிறது. இதில் லஞ்சம் எல்லாம் போக ஒரு பிள்ளைக்கு என்ன கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த லட்சணத்தில் சிறப்பு உணவு என்று ஒரு கூத்து.

16 கிராம் உருளைக்கிழங்கும், 20 கிராம் கொண்டைக்கடலையும் சிறப்பு உணவுப்பட்டியல்.

ஏதோ மூன்று முட்டை இருப்பதால் இந்தப்பிள்ளைகள் இன்னும் சத்துணவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

சத்துணவு வழங்கப்படும் முறை சீர் படவேண்டும்.

சரியான கண்காணிப்பு இல்லாததால் சத்துணவு ஆயாக்கள் கொடுக்கு அளவை வாங்கிக்கொண்டுவிட்டு ஒதுங்கிப்போய்விடவேண்டும்.

நம்முடைய முதலமைச்சரின் கண்களில் இருந்து எதுவுமே தப்பாது என்றெல்லாம் பத்திரிக்கைகாரர்கள் பீற்றிக்கொள்கிறார்கள்.

இன்னும் முதல்வரின் பார்வை இந்த சோகை பீடித்த சத்துணவு மீது படவில்லையோ?
ண்டும்.

முதல்வரின் பார்வை இன்னும் இந்த சோகை பீடித்த சத்துணவு மீது படவில்லையோ?

அப்பனுக்கு சாராயம்; பிள்ளைக்கு சத்துணவு

“அப்பனுக்கு சாராயம்; பிள்ளைக்கு சத்துணவு” என்று மேட்டுக்குடி மக்கள் கிண்டலடிப்பது செய்வது உண்டு.

முதற்பாதி மாதாமாதம் வளர்ச்சியடைகிறது. முதல்வரின் கவனத்தை உடனடியாக கவருகிறது.

அடுத்தபாதி மாதாமாதம் தேய்கிறது.

முதல்வர் கிடக்கட்டும்; அதிகாரிகள்கூட கவனிப்பதில்லை.

சத்துணவு இப்போது ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

இது கசப்பான உண்மை. பள்ளிகளுக்குச்செல்லும் மருத்துவக்குழுவின் கணிப்பின்படி ஏறத்தாழ 90 சதவீதம் மாணவ மாணவிகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை விவசாயக்குடும்ப பின்னணியில் இருப்பவர்கள். காலையில் கிடைப்பதை தின்றுவிட்டு அல்லது குடித்துவிட்டு பள்ளிக்கு வருபவர்கள்.

மதியம் பள்ளியில் சாப்பாடு கொடுக்கும்வரை பசிமயக்கத்தோடு இருப்பவர்கள்.

சத்துணவு என்னும் பெயரில் ஒரு சாப்பாடு கொடுத்தபிறகுகூட முழுப்பசி என்பது போய் அரைப்பசி என்றாகிவிடுகிறது இந்தக்குழந்தைகளுக்கு.

ஒரு மாணவருக்கு 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 20 பைசா காய்கறி, 8.5 பைசா மளிகைப்பொருட்கள் என்று அரசாங்கம் பார்த்துப்பார்த்து செலவழிக்கிறது. இதில் லஞ்சம் எல்லாம் போக ஒரு பிள்ளைக்கு என்ன கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த லட்சணத்தில் சிறப்பு உணவு என்று ஒரு கூத்து.

16 கிராம் உருளைக்கிழங்கும், 20 கிராம் கொண்டைக்கடலையும் சிறப்பு உணவுப்பட்டியல்.

ஏதோ மூன்று முட்டை இருப்பதால் இந்தப்பிள்ளைகள் இன்னும் சத்துணவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

சத்துணவு வழங்கப்படும் முறை சீர் படவேண்டும்.

சரியான கண்காணிப்பு இல்லாததால் சத்துணவு ஆயாக்கள் கொடுக்கு அளவை வாங்கிக்கொண்டுவிட்டு ஒதுங்கிப்போய்விடவேண்டும்.

நம்முடைய முதலமைச்சரின் கண்களில் இருந்து எதுவுமே தப்பாது என்றெல்லாம் பத்திரிக்கைகாரர்கள் பீற்றிக்கொள்கிறார்கள்.

இன்னும் முதல்வரின் பார்வை இந்த சோகை பீடித்த சத்துணவு மீது படவில்லையோ?

எங்க தாத்தாகூட ஒரு யானை வைத்திருந்தார்...

யானை குழியில் விழப்போவது தெரிந்தால் தவளை என்ன செய்யும்?

பின்னால் இருந்து ஒர் உதை கொடுக்கும்.

அரசாங்கத்திடம் இருந்து ஆசிரியர்களுக்குரிய ஊதியம் முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொண்டு வருகின்றன இந்த உதவிபெறும் பள்ளிகள்.

என்றாலும், அரசு கூறும் அறிவுரைகளை துச்சமென மதிக்கின்றன இந்தப்பள்ளிகள்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்பது அரசின் ஆணை.

கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு இதை வலியுறுத்திவருகிறது.

முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு முதன்மைக்கல்வி அலுவலர் கூட்டம் போட்டு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

உனக்கும் பே பே.....உங்கப்பனுக்கும் பே பே..... என்கிற பாணியில் எதிர்வினையாற்றியிருக்கிறது திருச்சியில் ஓர் உதவிபெறும் பள்ளி.

நுழைவுத்தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களிடமிருந்து நன்கொடை கேட்கப்படுகிறதாம்.

இன்னும் சில பள்ளிகளில் நுழைவுத்தேர்வு இல்லை. ஆனால் நன்கொடை கட்டாயமாம்.

இதெல்லாம் என்ன கொடுமை?

பேய் ஆட்சி செய்தால், பிசாசுகள் கூறுவதுதான் சாத்திரம்.

யானை இளைத்துப்போய் குழியில் விழப்போனால், தவளையும் தன் பங்கிற்கு ஓர் உதை கொடுக்கும் என்பது உலக நீதி.

கல்வித்துறை பலமிழந்துபோய்விட்டது. இப்போதோ, இன்னமும் கொஞ்சநேரத்திலோ குழிக்குள் வீழலாம் என்கிற நிலை.

இந்தத் தவளைகள் உதைக்காமல் என்ன செய்யும்?

தடுமாறி விழுகிறதா சமச்சீர்கல்வி?

தமிழ்நாட்டில் அரசு அனுமதியுடன்,

12 ஆம் வகுப்புவரை 1307 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும்,

10 ஆம் வகுப்புவரை 3244 மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகளும்,

இயங்குகின்றன.

அரசின் முழுமையான கட்டுப்பாட்டில்,

உயர்நிலைப்பள்ளிகள் 2860 ம்,

மேல்நிலைப்பள்ளிகள் 2320 ம்

இயங்குகின்றன.

இவை தவிர அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 90,000.

மாணவர் வருகை குறைவாக இருப்பதால் ஒவ்வோர் ஆண்டும் அரசு நடத்தும் தொடக்கப்பள்ளிகள் ஓசையின்றி இழுத்து மூடப்பட்டுவருகின்றன.

ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் தழைத்து வளருகின்றன. அரசின் ஊழல் போல பல்கிப்பெருகிவருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை மத்திய மாநில அரசுகள் கொட்டியழுதபோதிலும், இந்த சவளைப்பள்ளிகள் தேறமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன.

என்ன காரணம்?

பெற்றோர்களின் ஆங்கில மோகம்.

அரசுப்பள்ளிகளின் மீது பெற்றோர்களின் நம்பிக்கையிழப்பு.

பெற்றோர்கள் நம்புவது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே தங்களுடைய பள்ளியின் மீது நம்பிக்கையில்லை.

எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்கூட தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

சமச்சீர்கல்வியை ஆராய்ந்த முத்துக்குமரன் குழு அண்மைப்பள்ளித்திட்டத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

காலம் காலமாக கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் திட்டம்தான் அண்மைப்பள்ளித்திட்டம்.

அது என்ன அண்மைப்பள்ளித்திட்டம்?
ஒவ்வொரு குழந்தைக்கும் அது வசிக்குமிடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிதான் படிக்கவேண்டிய பள்ளி.

பெற்றோர் அந்தப்பள்ளியை பாடாவதி பள்ளிக்கூடம் என்று கருதினாலும் கூட அங்கே தான் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்கவேண்டும்.

ஒரு மாவட்டக் கலெக்டரோ, எம்.எல்.ஏ.வோ இதுபோன்ற ஒரு பாடாவதிபள்ளியில் தன்னுடைய பிள்ளையை சேர்ந்தபிறகு அந்த பள்ளியின் தரத்தை உயர்த்தத்தானே முயலுவார்?

பெற்றோர்கள் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தமக்கு அருகாமையில் இருக்கும் பள்ளிகளை கண்காணிக்கும்போது காலப்போக்கில் பாடாவதி பள்ளிகளே இல்லாமல் போகும் என்பது சர்வ நிச்சயம்.

பள்ளி வாகனப்போக்குவரத்து குறையும்.

விபத்துகள் குறையும்.

எரிபொருள் மிச்சமாகும்.

பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியம் மேம்படும்.

அரசு மார்தட்டிக்கூறும் சமச்சீர் கல்வி அடிக்கடி விழுந்து எழுகிறது.

ஒரேயடியாக விழுந்துவிடுமோ என்றுகூட நமக்கு ஐயம் தோன்றுகிறது.

அரசு ஒப்புதல் அளித்த பாடத்திட்டத்தில் தனியாரே பாடப்புத்தகம் தயாரித்துக்கொள்ளலாம் என்று ஆபத்தான் புதிய அறிவிரை பிறந்திருக்கிறது.

சமச்சீர் கல்விக்கு அடிமேல் அடி.

அரசு இந்த அடிகளை ஏற்குமா? சமச்சீர்கல்வியை தாங்கிப்பிடிக்குமா?

Monday, May 3, 2010

எழுச்சிபெறுமா சமச்சீர்கல்வி?

சமச்சீர்கல்விச்சட்டம் செல்லும் என்று தீர்ப்பாகியிருக்கிறது.

கூடவே, மே 15க்குள் அரசின் விதிமுறைகள் பள்ளிகளுக்கு தெரிவிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாடத்திற்கும் அரசு அங்கீகரித்துள்ள பாடப்புத்தகங்களின் பட்டியலையும் அரசு வெளியிடவேண்டுமாம்.

நீதிமன்றத்தின் இந்த அறிவுரை சமச்சீர்கல்வியின் அடிப்படையை அசைத்துப்பார்க்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எடுத்துக்காட்டாக, ஏழாம் வகுப்பு அறிவியல் பாடமென்றால், தமிழகம் முழுவதும் ஒரே பாடநூல் இருந்தால்தான் அதற்கு சமச்சீர் கல்வி என்று பெயர்.

தஞ்சாவூரில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அரசாங்க புத்தகமும், திருச்சியில் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு ஒரு தனியார் கம்பெனி வெளியிட்ட புத்தகமும் இருக்குமானால் இதை நாம் எப்படி சமச்சீர்கல்வியாக கொள்ள முடியும்?

சாதாரணமாக தனியார் புத்தக கம்பெனிகள் பள்ளிகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்களை விற்பதாக கருதுவோம்.

மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்று நீதிமான்கள் கருதுகிறார்களா?

ஏற்கனவே கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுவந்த தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் இடமுடியாமல் அரசு தவிப்பது தனிக்கதை.

அரசே இந்த கட்டணக்கொள்ளைக்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகப்படவும் இப்போது வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், புத்தகங்கள் வாயிலாக தனியார்பள்ளிகள் பெற்றுவந்த பெருமளவு கமிஷனை தடையின்றி பெறுவதற்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு உதவும்.

மாநிலம் முழுவதும், அனைத்து மாணவர்களுக்கும்,

ஒரே விதமான பாடத்திட்டம்,
ஒரே விதமான பாட நூல்கள்,
ஒரே விதமான தேர்வுமுறை,
ஒரே விதமான பள்ளிக்கட்டணம்,
ஒரே விதமான சீருடை

என்று இருப்பதுதான் சமச்சீர்கல்வியின் அடிப்படை.

அரசு உறங்கக்கூடாது.

அல்லது, உறங்குவதுபோல பாவனை செய்யக்கூடாது.