Monday, May 3, 2010

எழுச்சிபெறுமா சமச்சீர்கல்வி?





சமச்சீர்கல்விச்சட்டம் செல்லும் என்று தீர்ப்பாகியிருக்கிறது.

கூடவே, மே 15க்குள் அரசின் விதிமுறைகள் பள்ளிகளுக்கு தெரிவிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாடத்திற்கும் அரசு அங்கீகரித்துள்ள பாடப்புத்தகங்களின் பட்டியலையும் அரசு வெளியிடவேண்டுமாம்.

நீதிமன்றத்தின் இந்த அறிவுரை சமச்சீர்கல்வியின் அடிப்படையை அசைத்துப்பார்க்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எடுத்துக்காட்டாக, ஏழாம் வகுப்பு அறிவியல் பாடமென்றால், தமிழகம் முழுவதும் ஒரே பாடநூல் இருந்தால்தான் அதற்கு சமச்சீர் கல்வி என்று பெயர்.

தஞ்சாவூரில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அரசாங்க புத்தகமும், திருச்சியில் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு ஒரு தனியார் கம்பெனி வெளியிட்ட புத்தகமும் இருக்குமானால் இதை நாம் எப்படி சமச்சீர்கல்வியாக கொள்ள முடியும்?

சாதாரணமாக தனியார் புத்தக கம்பெனிகள் பள்ளிகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்களை விற்பதாக கருதுவோம்.

மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்று நீதிமான்கள் கருதுகிறார்களா?

ஏற்கனவே கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுவந்த தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் இடமுடியாமல் அரசு தவிப்பது தனிக்கதை.

அரசே இந்த கட்டணக்கொள்ளைக்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகப்படவும் இப்போது வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், புத்தகங்கள் வாயிலாக தனியார்பள்ளிகள் பெற்றுவந்த பெருமளவு கமிஷனை தடையின்றி பெறுவதற்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு உதவும்.

மாநிலம் முழுவதும், அனைத்து மாணவர்களுக்கும்,

ஒரே விதமான பாடத்திட்டம்,
ஒரே விதமான பாட நூல்கள்,
ஒரே விதமான தேர்வுமுறை,
ஒரே விதமான பள்ளிக்கட்டணம்,
ஒரே விதமான சீருடை

என்று இருப்பதுதான் சமச்சீர்கல்வியின் அடிப்படை.

அரசு உறங்கக்கூடாது.

அல்லது, உறங்குவதுபோல பாவனை செய்யக்கூடாது.

No comments:

Post a Comment