Friday, May 7, 2010

எங்க தாத்தாகூட ஒரு யானை வைத்திருந்தார்...




யானை குழியில் விழப்போவது தெரிந்தால் தவளை என்ன செய்யும்?

பின்னால் இருந்து ஒர் உதை கொடுக்கும்.

அரசாங்கத்திடம் இருந்து ஆசிரியர்களுக்குரிய ஊதியம் முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொண்டு வருகின்றன இந்த உதவிபெறும் பள்ளிகள்.

என்றாலும், அரசு கூறும் அறிவுரைகளை துச்சமென மதிக்கின்றன இந்தப்பள்ளிகள்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்பது அரசின் ஆணை.

கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு இதை வலியுறுத்திவருகிறது.

முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு முதன்மைக்கல்வி அலுவலர் கூட்டம் போட்டு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

உனக்கும் பே பே.....உங்கப்பனுக்கும் பே பே..... என்கிற பாணியில் எதிர்வினையாற்றியிருக்கிறது திருச்சியில் ஓர் உதவிபெறும் பள்ளி.

நுழைவுத்தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களிடமிருந்து நன்கொடை கேட்கப்படுகிறதாம்.

இன்னும் சில பள்ளிகளில் நுழைவுத்தேர்வு இல்லை. ஆனால் நன்கொடை கட்டாயமாம்.

இதெல்லாம் என்ன கொடுமை?

பேய் ஆட்சி செய்தால், பிசாசுகள் கூறுவதுதான் சாத்திரம்.

யானை இளைத்துப்போய் குழியில் விழப்போனால், தவளையும் தன் பங்கிற்கு ஓர் உதை கொடுக்கும் என்பது உலக நீதி.

கல்வித்துறை பலமிழந்துபோய்விட்டது. இப்போதோ, இன்னமும் கொஞ்சநேரத்திலோ குழிக்குள் வீழலாம் என்கிற நிலை.

இந்தத் தவளைகள் உதைக்காமல் என்ன செய்யும்?

No comments:

Post a Comment