Tuesday, August 18, 2009

பூதலூரில் கட்டடப்பொறியாளர்களின் சாதனை

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது.

ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

சுற்றுச்சுவர் கட்டிய பொறியாளர்கள் ஒரு சாதனை செய்ய விரும்பினர்.

அதாவது, சுற்றுச்சுவரில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் செய்தால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.

எனவே மழைநீர் வெளியேறும் ஓட்டை இல்லாமல் பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டிமுடித்தனர்.

கடந்த திங்கட்கிழமை பெருமழை பெய்தது.

மழைநீர் வெளியேற வழியில்லாததால் பள்ளிவளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கிநின்றதைப்பார்த்து பொறியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழைநீரில் நீந்திவிளையாடிக்கொண்டிருந்த பாம்பு ஒன்று வீரமணி என்னும் மாணவனக் கடித்தது.

தற்போது வீரமணி தஞ்சாவூர் மருத்துவமனையில்.

சுற்றுச்சுவர் கட்டிய பொறியாளர்கள் மகிழ்ச்சியில்.

வாழ்க பாரதம்.

2 comments:

ஆயில்யன் said...

சிரிக்கவைக்கும் நிகழ்வாக தோன்றவில்லை சிறிய விசயம்தான் ஆனால் சரியானதொரு அரசு கட்டமைப்பு இருந்தும் கூட அரசு அலுவலர்கள் தம் பணியினை சரிவர செய்யாததே காரணம் :((

மாணவன் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் !

வடுவூர் குமார் said...

Building water retaining structure is very difficult but this was achieved without pre plan! should be appreciated.
Hats Off to the Engineers.

Post a Comment