Thursday, August 27, 2009

புதுவாழ்வு பெறுமா சமச்சீர் கல்வி?

சமச்சீர்கல்வி மீண்டும் செய்தித்தாட்களில் இடம்பிடித்துள்ளது. இந்த முறை முதல்வர் சமச்சீர்கல்வியை உச்சரித்திருக்கிறார்.

2010-2011 ஆம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சமச்சீர்கல்வி முறை கல்வியாளர்களின் தணியாத தாகம்.

அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பொது பாடநூல்கள் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயல்கள் நடைபெறுமாம்.

பயிற்றுமொழியாக தமிழுடன் இப்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடருமாம்.

சமச்சீர் கல்வி முறை எதிர்கொள்ளவெண்டிய பாதை கரடுமுரடானது.

எனினும் முதல்வரின் கவனதைப்பெற்றிருப்பதால் இந்தப்பாதை சீரமைக்கப்படும் என்று நம்புவோம்.

2 comments:

Unknown said...

பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3

01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?

நன்றி

http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html

ஜோதிஜி said...

ஐயா உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் இந்த பக்கத்தை படித்து கருத்துக்களை தெரிவியுங்கள். தொடக்க காலத்தில் எழுதியதால் நீளம் அகலம் பார்க்காதீர்கள்.

http://texlords.wordpress.com/2009/07/28

நிர்வாணம் மட்டுமே இங்கு அழகானது,

கிராமத்து பள்ளி குறித்து

நட்புடன்

தேவியர் இல்லம் திருப்பூர்
texlolrds@gmail.com

Post a Comment