Friday, November 20, 2009

இது என்ன கூத்து?




தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு விசித்திரமான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழாசிரியர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுப்பதாகவும், இதன் காரணமாக தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள் மாணவர்களுக்கு அறிமுகமில்லாமல் போய்விடுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அரசாங்கப்பள்ளிகளுக்கும், அரசாங்கத்தின் உதவிபெற்று நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் சதா சர்வ காலமும் ஆங்கிலம் கலந்த ‘டமிலில்’ தொழில் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பறையை மட்டும் செப்பனிட்டுப்பயனில்லை.

தமிழுணர்வையும், தமிழையும் தழைக்கச்செய்யவேண்டிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே ‘டமில்’ நிகழ்ச்சிகளில் காசு பார்த்துக்கொண்டிருக்கும்போது, பாவம் இந்த தமிழாசிரியர்கள் என்ன செய்யமுடியும்?

4 comments:

சீமாச்சு.. said...

//மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் சதா சர்வ காலமும் ஆங்கிலம் கலந்த ‘டமிலில்’ தொழில் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பறையை மட்டும் செப்பனிட்டுப்பயனில்லை.//

நியாயமான கருத்து. இப்பொழுது தமிழில் பேசுவது குறைந்து வருகிறதுதான்.. அதைத் தமிழாசிரியர்கள் மட்டும் மாற்றிவிடமுடியாது..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

என்ன ஐயா, ரொம்ப நாளாச்சிப் போலருக்கே பதிவு எழுதி.. தொடர்ந்து எழுதுங்களேன் படிக்கக் காத்திருக்கிறோம்

Post a Comment